தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ செஸ்: வைஷாலி அபாரம்

செஸ்: வைஷாலி அபாரம்

செஸ்: வைஷாலி அபாரம்


ADDED : மே 08, 2025 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2025 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ் தொடரின் முதல் இரு சுற்றில் வெற்றி பெற்றார் வைஷாலி.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் 'டாப்-2' இடம் பெறுபவர்கள், கேண்டிடேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்க தகுதி பெறலாம். இதுவரை முடிந்த 5 தொடர் முடிவில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா (308.34 புள்ளி), இந்தியாவின் ஹம்பி (279.17) முதல் இரு இடத்தில் உள்ளனர்.

இதன் கடைசி, 6வது தொடர் ஆஸ்திரியாவில் நடக்கிறது. இந்திய சார்பில் வைஷாலி (85 புள்ளி) பங்கேற்கிறார். முதல் சுற்றில் வைஷாலி, பல்கேரியாவின் சலிமோவாவை வென்றார்.

இரண்டாவது சுற்றில் வைஷாலி, ஜார்ஜியாவின் லேலாவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் வைஷாலி. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இவர், போட்டியின் 39 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இரண்டு சுற்று முடிவில் தலா இரு புள்ளி பெற்ற சீனாவின் டான் ஜோங்கி, வைஷாலி 'டாப்-2' இடத்தில் உள்ளனர். உக்ரைனின் அனா முஜிசக் (1.5) 3வது இடத்தில் உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us