/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குகேஷ் மூன்று வெற்றி * 'கிளச்' செஸ் தொடரில்...
/
குகேஷ் மூன்று வெற்றி * 'கிளச்' செஸ் தொடரில்...
ADDED : அக் 28, 2025 11:03 PM

செயின்ட் லுாயிஸ்: கிராண்ட் செஸ் டூர் தொடரின் 10 ஆண்டு கொண்டாட்டத்தை அடுத்து, கிளட்ச் செஸ் தொடர் நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் நவீன மயமாக்கப்பட்ட செயின்ட் லுாசியா செஸ் கிளப்பில் மூன்று நாள் இத்தொடர் நடக்கிறது.
உலகின் முன்னணி வீரர்கள் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் பேபியானோ காருவானா, ஹிகாரு நகமுரா என நான்கு பேர் மட்டும் பங்கேற்கின்றனர். முதல் நாளில் மூன்று சுற்று போட்டி நடந்தன. ஒவ்வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரு முறை மோதினர்.
முதலில் குகேஷ்-கார்ல்சன் மோதினர். முதல் போட்டியில் தோற்ற குகேஷ், அடுத்த போட்டியை 'டிரா' செய்தார். பின் குகேஷ், நகமுராவை சந்தித்தார். முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 46 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இருவரும் மோதிய 2வது போட்டி 'டிரா' ஆனது.
அடுத்து குகேஷ்-பேபியானோவை சந்தித்தார். இதன் இரு போட்டியிலும் குகேஷ் வெற்றி பெற்றார். முதல் நாள் முடிவில் குகேஷ், 4.0 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். கார்ல்சன் (3.5), நகமுரா (3.0), பேபியானோ (1.5) அடுத்த 3 இடத்தில் உள்ளனர்.

