ADDED : பிப் 28, 2024 10:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிராகு: செக் குடியரசில் 'பிராகு' சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி பங்கேற்கின்றனர்.
முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் பிரக்ஞானந்தா.
போட்டியின் 25வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா 'பிடியில்' சிக்கினார் வின்சென்ட். வேறு வழியில்லாத நிலையில் போட்டியின் 41வது நகர்த்தலில் வின்சென்ட் வீழ்ந்தார். மற்ற இந்திய வீரர்கள் விதிக் குஜ்ராத்தி, குகேஷ் தங்களது முதல் சுற்று போட்டிகளை 'டிரா' செய்தனர்.

