/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: அரையிறுதியில் சுமித்
/
குத்துச்சண்டை: அரையிறுதியில் சுமித்
ADDED : ஏப் 29, 2024 10:09 PM

அஸ்தானா: ஆசிய யூத் குத்துச்சண்டை அரையிறுதிக்கு இந்தியாவின் சுமித், பிரிஜேஷ், சாகர் முன்னேறினர்.
கஜகஸ்தானில் ஆசிய யூத், 22 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான யூத் 67 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சுமித் 5-0 என்ற கணக்கில் தென் கொரியாவின் ஹாங் செயோ ஜின்னை வீழ்த்தினார். 60 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாகர் ஜாகர் 5-0 என தாய்லாந்தின் கலாசீரம் தனபான்சகோனை வீழ்த்தினார். அடுத்து நடந்த பிரிஜேஷ் 4-3 என உஸ்பெகிஸ்தானின் சபிரோவ் சாய்பிதினை தோற்கடித்தார்.
இதன்மூலம் ஆண்களுக்கான யூத் பிரிவில் மூன்று பதக்கம் உறுதியானது. ஒட்டுமொத்தமாக இதுவரை 8 பதக்கம் உறுதியாகின. பெண்களுக்கான யூத் பிரிவில் இந்தியாவின் அன்னு (48 கிலோ), பார்தவி (66), நிகிதா சந்த் (60), குஷி பூனியா (81), நிர்ஜாரா பானா (+81) நேரடியாக அரையிறுதியில் விளையாடுகின்றனர்.

