sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/சிறந்த வீராங்கனை ஷீத்தல் தேவி

சிறந்த வீராங்கனை ஷீத்தல் தேவி

சிறந்த வீராங்கனை ஷீத்தல் தேவி


ADDED : மார் 30, 2026 10:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 10:46 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லாசன்: ஆண்டின் சிறந்த பாரா வில்வித்தை நட்சத்திரமாக, இந்தியாவின் ஷீத்தல் தேவி அறிவிக்கப்பட்டார்.

இந்திய பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி 19. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவருக்கு, பிறவியிலேயே இரு கைகள் கிடையாது. ஆசிய சாம்பியன்ஷிப் (ஒரு தங்கம், ஒரு வெள்ளி), ஆசிய பாரா விளையாட்டில் (2 தங்கம், ஒரு வெள்ளி) பதக்கம் கைப்பற்றிய இவர், 2024ல் பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். கடந்த ஆண்டு தென் கொரியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கத்தை தட்டிச் சென்றார். இது, உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் இவரது 4வது பதக்கம் (ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம்). இவருக்கு, 2023ல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் உலக வில்வித்தை அமைப்பு சார்பில், கடந்த ஆண்டின் சிறந்த பாரா வில்வித்தை நட்சத்திரமாக ஷீத்தல் தேவி தேர்வானார்.

இதுகுறித்து ஷீத்தல் தேவி, சமூகவலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், 'உலகின் தலைசிறந்த பாரா வில்வித்தை நட்சத்திரங்களுடன் பரிந்துரைக்கப்பட்டு, இவ்விருதுக்கு தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி. இது, இவ்விளையாட்டு மீதான எனது அர்ப்பணிப்புக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன்,' என, தெரிவித்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us