தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வில்வித்தை: இந்தியா 'நம்பர்-1'

வில்வித்தை: இந்தியா 'நம்பர்-1'

வில்வித்தை: இந்தியா 'நம்பர்-1'


ADDED : ஏப் 08, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புயுப்லா: உலக கோப்பை வில்வித்தையில் இந்திய அணிகள் 'நம்பர்-1' இடம் பிடித்தன.

மெக்சிகோவில் உலக கோப்பை 'ஸ்டேஜ் 1' வில்வித்தை தொடர் நடக்கிறது. காம்பவுண்டு பிரிவில் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. இந்தியாவின் பிரகதி 694 புள்ளியுடன் 6வது இடம் பெற்றார். முன்னணி வீராங்கனை ஜோதி 691 (10வது இடம்), மதுரா 689 (15), ஆதித்தி 689 (17) புள்ளி பெற்றனர். ஒட்டுமொத்தமாக 2074 புள்ளியுடன் அணிகள் பிரிவில் முதலிடம் பெற்றது இந்தியா.

ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பிரவின் ஓஜாஸ் 705 (12), அபிஷேக் வர்மா 702 (16), சாஹில் ராஜேஷ் 701 (18), குஷால் 700 (19) புள்ளிகள் பெற்றனர். மொத்தம் 2108 புள்ளியுடன், அணிகள் பிரிவில் முதலிடம் பிடித்தனர்.

கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் பிரவின் (705), பிரகதி (694) ஜோடி, மொத்தம் 1399 புள்ளி எடுத்து, தரவரிசையில் 4வது இடம் பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us