/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆகாஷ்தீப்-பிரியங்கா தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் நடை போட்டிக்கு
/
ஆகாஷ்தீப்-பிரியங்கா தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் நடை போட்டிக்கு
ஆகாஷ்தீப்-பிரியங்கா தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் நடை போட்டிக்கு
ஆகாஷ்தீப்-பிரியங்கா தகுதி: பாரிஸ் ஒலிம்பிக் நடை போட்டிக்கு
ADDED : ஏப் 21, 2024 10:26 PM

ஆன்டல்யா: பாரிஸ் ஒலிம்பிக் நடை போட்டிக்கு இந்தியாவின் ஆகாஷ்தீப், பிரியங்கா ஜோடி தகுதி பெற்றது.
துருக்கியில், உலக தடகள நடை போட்டி (அணிகள்) சாம்பியன்ஷிப் நடக்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங், பிரியங்கா கோஸ்வாமி ஜோடி பங்கேற்றது. மொத்தம் 42.195 கிலோ மீட்டர் கொண்ட பந்தய துாரத்தை 3 மணி நேரம், 05 நிமிடம், 03 வினாடியில் கடந்த இந்திய ஜோடி 18வது இடம் பிடித்தது. 'டாப்-22' வரிசையில் இடம் பிடிக்கும் ஜோடிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் ஆகாஷ்தீப்-பிரியங்கா ஜோடி பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பை பெற்றது. ஏற்கனவே இவர்கள் தனிநபர் பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
முதல் மூன்று இடங்களை இத்தாலி (2 மணி நேரம், 56 நிமிடம், 45 வினாடி), ஜப்பான் (2 மணி நேரம், 57 நிமிடம், 04 வினாடி), ஸ்பெயின் (2 மணி நேரம், 57 நிமிடம், 47 வினாடி) ஜோடிகள் கைப்பற்றின.