ADDED : பிப் 07, 2025 10:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கராச்சி: பாகிஸ்தான் கால்பந்து கூட்டமைப்பில் (பி.எப்.எப்.,) நிர்வாக குளறுபடி உள்ளது. கடந்த 2017 முதல் இரு முறை தடை செய்யப்பட்டு, பின் விலக்கப்பட்டது.
2019ல் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில், புதியதாக குழு அமைக்கப்பட்டது.
பி.எப்.எப்., உள்ள குழப்பங்களை தீர்த்து, தேர்தல் நடத்துவது தான் இதன் பணி. ஆனால் கடந்த ஆறு ஆண்டாக குழுவின் தலைவர், உறுப்பினர்கள் ஐந்து முறை மாறி விட்டனர். எனினும் தேர்தல் நடத்த முடியவில்லை.
தவிர, அரசு நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுடன், 'பிபா' குழுவுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளும், பி.எப்.எப்., ல் சீர்திருத்தங்களை செய்ய தடையாக உள்ளன. இதையடுத்து பாகிஸ்தான் கால்பந்து அமைப்பை, 2017க்குப் பின் மூன்றாவது முறையாக 'பிபா' தடை செய்தது.

