/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
மான்செஸ்டர் சிட்டி வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில்
/
மான்செஸ்டர் சிட்டி வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில்
மான்செஸ்டர் சிட்டி வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில்
மான்செஸ்டர் சிட்டி வெற்றி: பிரிமியர் லீக் கால்பந்தில்
ADDED : ஏப் 26, 2024 11:10 PM

பிரைட்டன்: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-0 என பிரைட்டன் அணியை வீழ்த்தியது.
இங்கிலாந்தில் பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. பிரைட்டன் நகரில் நடந்த லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி, பிரைட்டன் அணிகள் மோதின. இதில் 'நடப்பு சாம்பியன்' மான்செஸ்டர் சிட்டி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மான்செஸ்டர் சிட்டி அணிக்கு கெவின் டி புரூய்ன் (17வது நிமிடம்), பில் போடன் (26, 34வது), ஜூலியன் அல்வரெஸ் (62வது) கைகொடுத்தனர்.
இதுவரை விளையாடிய 33 போட்டியில், 23 வெற்றி, 7 'டிரா', 3 தோல்வி என 76 புள்ளிகளுடன் மான்செஸ்டர் சிட்டி அணி 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் ஆர்சனல் அணி (77 புள்ளி) உள்ளது. மான்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி தொடரும் பட்சத்தில் தொடர்ச்சியாக 4வது முறையாக பிரிமியர் லீக் கோப்பை வெல்லலாம். மான்செஸ்டர் சிட்டி அணி இதுவரை 7 முறை கோப்பை வென்றுள்ளது.

