/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான் * தெற்காசிய பெண்கள் கால்பந்தில்...

ADDED : அக் 17, 2024 10:52 PM

காத்மண்டு: தெற்காசிய கால்பந்து லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 5-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், பெண்களுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 7 வது சீசன் நேற்று நேபாளத்தில் துவங்கியது. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, தனது முதல் போட்டியில் நேற்று பாகிஸ்தானை சந்தித்தது. இந்திய அணி கேப்டன் ஆஷாலதா, தனது 100வது சர்வதேச போட்டியில் களமிறங்கினார்.
போட்டி துவங்கிய 5வது நிமிடத்தில் இந்தியாவின் கிரேஸ், முதல் கோல் அடித்தார். 17 வது நிமிடத்தில் மணிஷா அசத்தினார். தொடர்ந்து 35வது நிமிடத்தில் இந்தியாவின் பாலா தேவி, ஒரு கோல் அடித்தார். இது சர்வதேச அரங்கில் இவர் அடித்த 50 வது கோல். 42வது நிமிடத்தில் கிரேஸ், தனது 2வது கோல் அடித்தார். முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் பாகிஸ்தானின் சுஹா கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
இரண்டாவது பாதியில் பாகிஸ்தானின் கய்லா, 78 வது நிமிடத்தில் இந்தியாவின் ஜோதி கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.