/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
மாலத்தீவை வீழ்த்தியது இந்தியா * பெண்களுக்கான நட்பு கால்பந்தில்...
/
மாலத்தீவை வீழ்த்தியது இந்தியா * பெண்களுக்கான நட்பு கால்பந்தில்...
மாலத்தீவை வீழ்த்தியது இந்தியா * பெண்களுக்கான நட்பு கால்பந்தில்...
மாலத்தீவை வீழ்த்தியது இந்தியா * பெண்களுக்கான நட்பு கால்பந்தில்...
ADDED : டிச 30, 2024 11:21 PM

பெங்களூரு: நட்பு கால்பந்து போட்டியில் இந்திய பெண்கள் அணி 14-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தியது. லிண்டா, பியாரி 'ஹாட்ரிக்' கோல் அடித்தனர்.
இந்தியா வந்துள்ள மாலத்தீவு (163 வது இடம்) பெண்கள் கால்பந்து அணி, இரண்டு நட்பு போட்டியில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது.
உலகத் தரவரிசையில் 69 வது இடத்திலுள்ள இந்திய பெண்கள் அணியினர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் கோல் மழை பொழிந்தனர்.
பியாரி (6, 7, 14வது நிமிடம்), லிண்டா (11, 21, 28) ஹாட்ரிக் கோல் அடித்தனர். அறிமுக நேஹா (15) தன் பங்கிற்கு அசத்த, இந்திய அணி முதல் 30 நிமிடத்தில் 7 கோல் அடித்தது.
மீண்டும் அசத்திய லிண்டா (52), இப்போட்டியில் நான்காவது கோல் அடித்தார்.
கஜோல் (59, 66) 2 கோல், சங்கிதா (51), ரஞ்சனா (54), ரிம்பா (62) தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 14-0 என்ற கோல் கணக்கில் கலக்கல் வெற்றி பெற்றது.
இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி 2025, ஜன. 2ல் பெங்களூருவில் நடக்க உள்ளது.