/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
கால்பந்து: எளிய பிரிவில் இந்தியா
/
கால்பந்து: எளிய பிரிவில் இந்தியா
ADDED : டிச 10, 2024 11:21 PM

புதுடில்லி: ஆசிய கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய அணி எளிய பிரிவில் இடம் பெற்றது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்று, 2025, மார்ச் மாதம் துவங்குகின்றன. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம்.
இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் 185 வது இடத்திலுள்ள வங்கதேசத்தை சந்திக்க உள்ளது. போட்டி நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அடுத்து ஹாங்காங் (156வது இடம்), சிங்கப்பூர் (161) அணிகளுடன் மோதும்.
வெல்ல முடியுமா
இந்திய அணி, 2024ல் பங்கேற்ற 11 போட்டியில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது தரவரிசையில் 127 வது இடத்தில் உள்ளது. வங்கதேசத்திற்கு எதிராக, கடைசியாக 2021 தெற்காசிய சாம்பியன்ஷிப்பில் இவ்விரு அணிகள் மோதிய போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
ஹாங்ஹாங்கிற்கு எதிராக நடந்த ஆசிய தகுதிச்சுற்று (2023) போட்டியில், இந்தியா 4-0 என வென்றுள்ளது. 2022ல் சிங்கப்பூர்-இந்தியா மோதிய நட்பு போட்டி 1-1 என 'டிரா' ஆனது. இம்முறை சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியா ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம்.

