/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
காலிறுதியில் ஈஸ்ட் பெங்கால் * ஏ.எப்.சி., சாலஞ்ச் கால்பந்தில்...
/
காலிறுதியில் ஈஸ்ட் பெங்கால் * ஏ.எப்.சி., சாலஞ்ச் கால்பந்தில்...
காலிறுதியில் ஈஸ்ட் பெங்கால் * ஏ.எப்.சி., சாலஞ்ச் கால்பந்தில்...
காலிறுதியில் ஈஸ்ட் பெங்கால் * ஏ.எப்.சி., சாலஞ்ச் கால்பந்தில்...
ADDED : நவ 01, 2024 11:18 PM

திம்பு: ஏ.எப்.சி., சாலஞ்ச் தொடரில் இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கிளப் அணிகளுக்கான ஏ.எப்.சி., சாலஞ்ச் லீக் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 11 வது சீசனில் 18 அணிகள் மோதுகின்றன. இந்தியா சார்பில் ஈஸ்ட் பெங்கால் அணி பங்கேற்கிறது. மேற்கு மண்டலத்தில் 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது ஈஸ்ட் பெங்கால்.
நேற்று தனது மூன்றாவது போட்டியில் லெபனானை சேர்ந்த நெஜ்மே அணியை சந்தித்தது. போட்டி துவங்கிய 8வது நிமிடம், நெஜ்மே வீரர் மூசா, 'சேம்சைடு' கோல் அடித்தார். ஈஸ்ட் பெங்கால் அணியின் தியாமென்டாகோஸ் (15, 77) இரண்டு கோல் அடித்தார். மறுபக்கம் நெஜ்மே அணிக்கு ஒபரே (18), மன்ந்தர் (43) தலா ஒரு கோல் அடித்தனர்.
முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மொத்தம் பங்கேற்ற 3 போட்டியில் 2 வெற்றி, 1 'டிரா' என, 7 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்து, காலிறுதிக்கு முன்னேறியது.