/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தினேஷ் கார்த்திக் 'ரெடி': உலக கோப்பையில் பங்கேற்க
/
தினேஷ் கார்த்திக் 'ரெடி': உலக கோப்பையில் பங்கேற்க
ADDED : ஏப் 20, 2024 10:23 PM

கோல்கட்டா: ''உலக கோப்பையில் ('டி-20') இந்தியாவுக்காக விளையாட தயாராக இருக்கிறேன்,'' என, தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் 38. தமிழகத்தை சேர்ந்த இவர், ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறார். 7 போட்டியில் 2 அரைசதம் உட்பட 226 ரன் எடுத்துள்ளார். இதன் 'ஸ்டிரைக் ரேட்' 205.45.. வரும் ஜூன் 1ல் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் துவங்கவுள்ள 'டி-20' உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பருக்கான இடத்துக்கு தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்படலாம். இவருக்கு போட்டியாக ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ராகுல் உள்ளனர்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், ''மீண்டும் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். 'டி-20' உலக கோப்பையில் பங்கேற்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.

