ADDED : ஆக 18, 2026 11:17 PM

சிட்னி: அளவுக்கு அதிகமாக மது குடித்து வாகனம் ஓட்டிய வார்னருக்கு ரூ. 1.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி முன்னாள் துவக்க வீரர் டேவிட் வார்னர் 39. தற்போது, உள்ளூர் 'டி-20' லீக் தொடர்களில் மட்டும் பங்கேற்கிறார். கடந்த ஏப்., மாதம் சிட்னியில் உள்ள மலபார் சாலையில், தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் போலீசார் நடத்திய சுவாச சோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு அதிகமாக, மது குடித்து விட்டு, வாகனத்தை இயக்கியது உறுதியானது.
உடனடியாக கைது செய்யப்பட்ட இவர், மரவுப்ரா போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்த வழக்கில் நேற்று, வேவர்லே கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட வார்னருக்கு ரூ. 1.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தவிர, கார் இன்ஜினுடன் 'பிரீத்தலைசர் அல்லது இன்டர் லாக்' கருவியை பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒருவேளை ஓட்டுனரின் சுவாசத்தில் மதுவின் வாசனை இருப்பதை, இக்கருவி உணர்ந்தால், இன்ஜின் இயக்கத்தை நிறுத்தி விடும்.
