/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
மீண்டும் சரிந்தது இந்திய பேட்டிங் * தொடரை இழந்து ஏமாற்றம்
/
மீண்டும் சரிந்தது இந்திய பேட்டிங் * தொடரை இழந்து ஏமாற்றம்
மீண்டும் சரிந்தது இந்திய பேட்டிங் * தொடரை இழந்து ஏமாற்றம்
மீண்டும் சரிந்தது இந்திய பேட்டிங் * தொடரை இழந்து ஏமாற்றம்
UPDATED : நவ 26, 2025 03:54 PM
ADDED : நவ 25, 2025 11:23 PM

கவுகாத்தி: கவுகாத்தி டெஸ்டில் இந்திய அணி 140 ரன்னில் சுருண்டு தோல்வியடைந்தது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் சவாலில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 489, இந்தியா 201 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி, 260/5 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. 549 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்தியா. நான்காவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 27/2 ரன் எடுத்திருந்தது. சாய் சுதர்சன் (2), 'நைட்வாட்ச்மேனாக' வந்த குல்தீப் யாதவ் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. குல்தீப் (5), துருவ் ஜுரெல் (2), ரிஷாப் (13) என வரிசையாக ஹார்மர் சுழலில் சிக்கினர். சாய் சுதர்சன் (14), வாஷிங்டன் சுந்தர் (16), நிதிஷ் குமார் (0) நிலைக்கவில்லை. ஜடேஜா 54 ரன் எடுத்து ஆறுதல் தந்தார்.
கடைசியில் சிராஜ் (0) அவுட்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 140 ரன்னில் சுருண்டது. தென் ஆப்ரிக்கா 408 ரன்னில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என கைப்பற்றியது. ஹார்மர் 6 விக்கெட் சாய்த்தார்.

