sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கிரிக்கெட்

/

சர்பராஸ் இரட்டை சதம் * மும்பை அணி ரன் குவிப்பு

/

சர்பராஸ் இரட்டை சதம் * மும்பை அணி ரன் குவிப்பு

சர்பராஸ் இரட்டை சதம் * மும்பை அணி ரன் குவிப்பு

சர்பராஸ் இரட்டை சதம் * மும்பை அணி ரன் குவிப்பு


UPDATED : ஜன 23, 2026 11:06 PM

ADDED : ஜன 23, 2026 11:04 PM

Google News

UPDATED : ஜன 23, 2026 11:06 PM ADDED : ஜன 23, 2026 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 91வது சீசன் நடக்கிறது. ஐதராபாத்தில் நடக்கும் போட்டியில் ('டி') மும்பை, ஐதராபாத் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 332/4 ரன் எடுத்திருந்தது. சர்பராஸ் (142) அவுட்டாகாமல் இருந்தார்.

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. சர்பராஸ் கான் இரட்டை சதம் அடித்தார். இவர், 219 பந்தில் 227 ரன் எடுத்து அவுட்டானார். மும்பை அணி முதல் இன்னிங்சில் 560/10 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி இரண்டாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 138/2 ரன் எடுத்து, 422 ரன் பின்தங்கி இருந்தது. ராகுல் சிங் (82), ஹிமதேஜா (40) அவுட்டாகாமல் இருந்தனர்.

தமிழகம் அபாரம்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடக்கும் 'ஏ' பிரிவு போட்டியில் தமிழகம், ஒடிசா அணிகள் மோதுகின்றன. முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 281/7 ரன் எடுத்திருந்தது. நேற்று காலையில் கேப்டன் சாய் கிஷோர் (12), நிதிஷ் ராஜகோபால் (54) அவுட்டாக, 286 ரன்னில் ஆல் அவுட்டானது.

அடுத்து களமிறங்கிய ஒடிசா அணி முதல் இன்னிங்சில் 148 ரன்னுக்கு சுருண்டது. தமிழகத்தின் சோனு 5 விக்கெட் வீழ்த்தினார். அவுட்டாகாமல் இருந்தனர். 2வது நாள் முடிவில் தமிழக அணி இரண்டாவது இன்னிங்சில் 26/1 ரன் எடுத்து, 164 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

சுப்மன் ஏமாற்றம்

ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 172, பஞ்சாப் 139 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 286 ரன் எடுத்தது. 320 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பஞ்சாப், 125 ரன்னில் சுருண்டு, 194 ரன்னில் தோற்றது. கேப்டன் சுப்மன் கில் 14 ரன் எடுத்தார்.






      Dinamalar
      Follow us