தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பைனலில் கர்நாடக அணி * ரஞ்சி கோப்பை தொடரில்

பைனலில் கர்நாடக அணி * ரஞ்சி கோப்பை தொடரில்

பைனலில் கர்நாடக அணி * ரஞ்சி கோப்பை தொடரில்


ADDED : பிப் 19, 2026 10:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 10:49 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ: ரஞ்சி கோப்பை பைனலுக்கு முன்னேறியது கர்நாடக அணி.

உ.பி.,யின் லக்னோவில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் கர்நாடகா, உத்தரகாண்ட் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் கர்நாடகா 736, உத்தரகாண்ட் அணி 233 ரன் எடுத்தன. நான்காவது நாள் முடிவில் கர்நாடக அணி, இரண்டாவது இன்னிங்சில் 299/6 ரன் எடுத்து, 802 முன்னிலை பெற்றிருந்தது.

நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. கர்நாடக அணி, இரண்டாவது இன்னிங்சில் 323 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ராகுல் (86 ரன்) அவுட்டாகாமல் இருந்தார்.

இமாலய இலக்கு

இரண்டாவது இன்னிங்சில் 827 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது உத்தரகாண்ட். அவ்னீஸ் 71 பந்தில் 66 ரன் எடுத்தார். சவுரப் ராவத் (53), அபே நேகி (57) அரைசதம் கடந்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் உத்தரகாண்ட் அணி 260/6 ரன் எடுத்திருந்த போது போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் கர்நாடக அணி வென்றதாக அறிவிக்கப்பட, 11ஆண்டுக்குப் பின் மீண்டும் பைனலுக்கு முன்னேறியது.

பிப். 24ல் கர்நாடகாவின் ஹப்பள்ளியில் துவங்கும் பைனலில் கர்நாடகா-காஷ்மீர் அணிகள் மோத உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us