/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
லதாம், சான்ட்னர் அரைசதம் * நியூசிலாந்து ரன் குவிப்பு
/
லதாம், சான்ட்னர் அரைசதம் * நியூசிலாந்து ரன் குவிப்பு
லதாம், சான்ட்னர் அரைசதம் * நியூசிலாந்து ரன் குவிப்பு
லதாம், சான்ட்னர் அரைசதம் * நியூசிலாந்து ரன் குவிப்பு
ADDED : டிச 14, 2024 06:30 PM

ஹாமில்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி, 315/9 ரன் குவித்தது. லதாம், சான்ட்னர் அரைசதம் அடித்தனர்.
நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து, 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது, கடைசி டெஸ்ட் வெலிங்டனில் துவங்கியது.
'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், பீல்டிங் தேர்வு செய்தார்.
லதாம் அரைசதம்
நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லதாம், வில் யங் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்த போது, யங் (42) அவுட்டானார். லதாம் அரைசதம் கடந்தார். இவர் 63 ரன்னில் திரும்பினார். ரச்சின் ரவிந்திரா (18), 'சீனியர்' வில்லியம்சன் (44), பாட்ஸ் பந்தை எதிர்கொண்டார். இவரது பேட்டில் பட்ட பந்து, பின்னோக்கிச் சென்று ஸ்டம்சை தகர்க்க, விரக்தியுடன் திரும்பினார். மிட்செல் (14), பிலிப்ஸ் (5), பிளன்டல் (21) ஏமாற்றினர்.
சான்ட்னர் 'வேகம்'
தனது கடைசி போட்டியில் பங்கேற்கும் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தீ, சான்ட்னருடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். சான்ட்னர் அரைசதம் எட்டினார். சவுத்தீ 10 பந்தில் 23 ரன் எடுத்து அவுட்டானார்.
முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 319 ரன் எடுத்திருந்தது. சான்ட்னர் (50), ரூர்கே (0) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் பாட்ஸ், அட்கின்சன் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

