sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பாபர் ஆசம் விலகல்

பாபர் ஆசம் விலகல்

பாபர் ஆசம் விலகல்


ADDED : மார் 13, 2025 07:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2025 07:58 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கராச்சி: உள்ளூர் 'டி-20' தொடரில் இருந்து பாகிஸ்தானின் பாபர் ஆசம் விலகினார்.

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 5 'டி-20' (மார்ச் 16, 18, 21, 23, 26), 3 ஒருநாள் போட்டிகள் (மார்ச் 29, ஏப். 2, 5) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 'டி-20' தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் பாபர் ஆசம், கேப்டன் முகமது ரிஸ்வான், வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா சேர்க்கப்படவில்லை. ஒருநாள் தொடருக்கு மட்டும் தேர்வாகினர்.

இவர்கள் மூவரும், தேசிய 'டி-20' சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பர் என, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாபர் ஆசம், நசீம் ஷா, இத்தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் தொடருக்கு தயாராகும் விதமாக விலகியதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த மாதம் நடக்கவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கு தயாராகவே இவர்கள் விலகியதாக, முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டினர். பாபர் ஆசம், கடந்த 2020ம் ஆண்டு முதல் உள்ளூர் முதல் தர போட்டியில் விளையாடவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us