/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
'சூப்பர் மேன்' இஷான் கிஷான் * தாமதமாக வந்ததால் தண்டனை
/
'சூப்பர் மேன்' இஷான் கிஷான் * தாமதமாக வந்ததால் தண்டனை
'சூப்பர் மேன்' இஷான் கிஷான் * தாமதமாக வந்ததால் தண்டனை
'சூப்பர் மேன்' இஷான் கிஷான் * தாமதமாக வந்ததால் தண்டனை
ADDED : ஏப் 03, 2024 11:36 PM

மும்பை: விமான நிலையத்தில் இஷான் கிஷான் 'சூப்பர் மேன்' உடையில் காணப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
ஐ.பி.எல்., தொடரில் ஐந்து முறை கோப்பை வென்ற அணி மும்பை. இம்முறை புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முதல் மூன்று போட்டியிலும் தோற்ற சோகத்தில் உள்ளது. அடுத்து நான்காவது போட்டியில் டில்லியை (ஏப். 7) சந்திக்க உள்ளது.
முன்னதாக மும்பை வீரர்கள் விமான நிலையம் வந்த போது, இஷான் கிஷான் உள்ளிட்டோர் மும்பை லோகோவுடன் கூடிய, நீல நிறத்தினால் ஆன 'சூப்பர் மேன்' உடையில் காணப்பட்டனர். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
அடுத்தடுத்த தோல்விகளில் இருந்து மீண்டு வர திட்டமிட்டுள்ள மும்பை அணி நிர்வாகம், வீரர்களுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. அணியின் கூட்டம், பஸ்சிற்கு தாமதமாக வருதல் உள்ளிட்ட செயல்களுக்கு வீரர்களுக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதன் ஒருபகுதியாக, கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் இஷான் கிஷான், ஷம்ஸ் முலானி, குமார் கார்த்திகேயா, நுவன் துஷாரா என நான்கு பேர் 'சூப்பர் மேன்' ஆடை அணிந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் 'வைரல்' ஆகி வருகிறது.
வருகிறார் சூர்யகுமார்
மும்பை அணி வீரர் சூர்யகுமார் 33. 'ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா' ஆப்பரேஷன் செய்தார். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில், காயத்தில் இருந்து மீண்டு வரத் தேவையான பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது உடற்தகுதி பெற்றுள்ளார். இதனால் வரும் 7ல் டில்லி அணிக்கு எதிரான போட்டியில், சூர்யகுமார் களமிறங்கலாம்.

