/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சாத்விக் - சிராக் ஜோடி வெற்றி: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
/
சாத்விக் - சிராக் ஜோடி வெற்றி: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
சாத்விக் - சிராக் ஜோடி வெற்றி: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
சாத்விக் - சிராக் ஜோடி வெற்றி: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்
ADDED : செப் 17, 2025 09:42 PM

ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி வெற்றி பெற்றது.
சீனாவில், மாஸ்டர்ஸ் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் ஜுனைடி ஆரிப், ராய் கிங் யாப் ஜோடியை சந்தித்தது. மொத்தம் 42 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சாத்விக், சிராக் ஜோடி 24-22, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பிரான்சின் டோமா ஜூனியர் போபோவ் மோதினர். இதில் ஏமாற்றிய லக்சயா சென் 11-21, 10-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 19-21, 13-21 என, சீனாவின் பெங் யான் ஜெ, ஹுவாங் டாங் பிங் ஜோடியிடம் வீழ்ந்தது.
பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ருதுபர்ணா, ஸ்வேதாபர்ணா ஜோடி 8-21, 13-21 என மலேசியாவின் கார்மன் டிங், ஆங் ஜின் யீ ஜோடியிடம் தோல்வியடைந்தது.