/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
சாத்விக்-சிராக் அபாரம்: சீன ஓபன் பாட்மின்டனில்
/
சாத்விக்-சிராக் அபாரம்: சீன ஓபன் பாட்மின்டனில்
ADDED : ஜூலை 25, 2025 11:26 PM

சாங்சூ: சீன ஓபன் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.
சீனாவில், 'சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் யேவ் சின் ஆங், ஈ யி டியோ ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
உன்னதி ஏமாற்றம்: பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலக தரவரிசையில் 35வது இடத்தில் உள்ள இந்தியாவின் உன்னதி ஹூடா), உலகின் 'நம்பர்-4' ஜப்பானின் அகானே யமகுச்சி மோதினர். இதில் ஏமாற்றிய உன்னதி 16-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

