/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
லக்சயா, தருண் ஏமாற்றம்: மக்காவ் ஓபன் பாட்மின்டனில்
/
லக்சயா, தருண் ஏமாற்றம்: மக்காவ் ஓபன் பாட்மின்டனில்
லக்சயா, தருண் ஏமாற்றம்: மக்காவ் ஓபன் பாட்மின்டனில்
லக்சயா, தருண் ஏமாற்றம்: மக்காவ் ஓபன் பாட்மின்டனில்
UPDATED : ஆக 02, 2025 10:28 PM
ADDED : ஆக 01, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்காவ்: மக்காவ் பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், தருண் தோல்வியடைந்தனர்.
மக்காவ்
ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு
அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேஷியாவின் அல்வி பர்ஹான்
மோதினர். மொத்தம் 39 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய லக்சயா 16-21,
9-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு
அரையிறுதியில் இந்தியாவின் தருண், மலேசியாவின் ஜஸ்டின் ஹோ மோதினர். ஒரு
மணி நேரம், 21 நிமிடம் வரை நீடித்த போட்டியில் தருண் 21-19, 16-21, 16-21
என போராடி தோல்வியடைந்தார்.