உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 13, 2026 09:58 PM

அ நிறம் | அளவு
டோக்கியோ: ஜப்பானில் பாரா பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையரில் ஆறு முறை உலக சாம்பியன் ஆன இந்தியாவின் பிரமோத் பகத், எஸ்.எல்.3 பிரிவில் பங்கேற்றார். இதன் பைனலில் சக வீரர் குமாரை சந்தித்தார். 30 நிமிடம் நடந்த போட்டி முடிவில் பிரமோத் 21-16, 21-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்கள் இரட்டையர் பைனலில் பிரமோத், சுகந்த் கடம் ஜோடி, 5-21, 15-21 என இந்தோனேஷியாவின் ஹிக்மத், பிரெடி ஜோடியிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
100வது பதக்கம்
சர்வதேச பாரா பாட்மின்டனில் 12 ஆண்டுகளாக விளையாடுகிறார் சுகந்த் கடம். நேற்று வெள்ளி வென்றதை அடுத்து, சர்வதேச அரங்கில் 100 வது பதக்கம் என்ற மைல்கல்லை எட்டினார்.
ஒட்டுமொத்தமாக இத்தொடரில் இந்தியாவுக்கு 1 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என 11 பதக்கம் கிடைத்தன.
