/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: சமீர் வர்மா ஏமாற்றம்
/
பாட்மின்டன்: சமீர் வர்மா ஏமாற்றம்
ADDED : மார் 19, 2024 10:52 PM

பசல்: சுவிட்சர்லாந்து பாட்மின்டன் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்தார் சமீர் வர்மா.
சுவிட்சர்லாந்தின் 'சுவிஸ் ஓபன் சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. இந்தியா சார்பில் சிந்து, லக்சயா உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் சமீர் வர்மா, பிரேசிலின் கோயல்ஹோவை 21-11, 10-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்றார்.
அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் சமீர் வர்மா, இந்தோனேஷியாவின் பர்ஹானிடம் 18-21, 12-21 என தோற்று, பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், தகுதிச்சுற்று முதல் போட்டியில் எல் சால்வடாரின் பிரான்சிஸ்கோவை 21-18, 21-12 என வென்றார். அடுத்த போட்டியில் சதிஷ் குமார், தென் கொரியாவின் ஜியோன் ஜின்னிடம் 17-21, 21-17, 15-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.

