UPDATED : செப் 26, 2026 07:51 PM
ADDED : செப் 26, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர், 40; மீன்பிடித் தொழிலாளி. இவர் கடந்த 24ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த குணா, அறிவழகன், பாலசுப்ரமணியன், வினோத் ஆகியோருடன் அப்பகுதியில் வலைக்கூடத்தில் வலை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அதேபகுதியை சேர்ந்த ஆகாஷ், 22, என்பவர் விலை உயர்ந்த பைக்கில் அபத்தான முறையில் வேகமாக மக்களை அச்சுறுத்தும் வகையில் சென்றார். அவரை சவுந்தர் தடுத்து நிறுத்தி தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், பைக்கில் இருந்து வீச்சருவாளை கையில் எடுத்து சவுந்தர் உள்ளிட்டவர்களை வெட்டி கொலை செய்து விடுவேன் என, மிரட்டி விட்டு சென்றார். சவுந்தர் கொடுத்த புகாரின் பேரில், ஆகாஷ் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
