நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கண்ணகி ஹைமாஸ் சந்திப்பு அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் மதுபோதையில், அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீ சார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் வில்லியனுாரைச் சேர்ந்த ஜெயகுமார் 25, என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

