/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
ADDED : அக் 25, 2025 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் சப் இன்ஸ் பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர்.
கோபாலன் கடை பகுதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் கத்தியை காட்டி அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு விரைந்து சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் கோபாலன் கடை பகுதியை சேர்ந்த அருண்குமார், 22, என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

