/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சங்கர வித்யாலயா பள்ளியில் யோகா பண்பு பயிற்சி நிறைவு
/
சங்கர வித்யாலயா பள்ளியில் யோகா பண்பு பயிற்சி நிறைவு
சங்கர வித்யாலயா பள்ளியில் யோகா பண்பு பயிற்சி நிறைவு
சங்கர வித்யாலயா பள்ளியில் யோகா பண்பு பயிற்சி நிறைவு
ADDED : மே 08, 2025 01:18 AM

புதுச்சேரி: புதுச்சேரி சிவராம்ஜி யோகா மையம், சமர்ப்பணம் சேவை மையம் இணைந்து, 4ம் ஆண்டு, யோகா பண்பு பயிற்சி முகாமை கடந்த 1ம் தேதி துவக்கியது. 7 நாட்கள் நடந்த முகாமில், யோகா, பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளுக்கு, மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன் நிறைவு விழா நேற்று பள்ளியில் நடந்தது. கணேசன் தலைமை தாங்கினார். சிவராம்ஜி யோகா மையத்தின் தலைவர் பால்ராஜா வரவேற்றார். வணிகர் கூட்டமைப்பு தலைவர் பாபு, பூமிநாதன், ஆரோக்கியா பாரதி மாநில அமைப்பு செயலாளர் ராஜதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக புதுச்சேரி ராமகிருஷ்ணா மடம் பொறுப்பாளர் சுவாமி நித்யேஷா நந்தா பங்கேற்று ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து, யோகா கலையின் நன்மைகள் மற்றும் ஆரோக்கியம் குறித்து சிறப்புரை ஆற்றினார். மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவராம்ஜி யோகா மையத்தின் பொருளாளர் மனோகரன் நன்றி கூறினார்.

