ADDED : ஜன 10, 2025 05:52 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: வில்லியனுார் அருகே கூலித்தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார், பரசுராமபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ராஜவேலு, 48; கூலித்தொழிலாளி. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை ராஜவேலு வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
அவரது மனைவி காமாட்சி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
