/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரிகளுக்கு இடையே மகளிர் கூடைபந்து போட்டி
/
கல்லுாரிகளுக்கு இடையே மகளிர் கூடைபந்து போட்டி
ADDED : டிச 20, 2025 06:31 AM

வில்லியனுார்: வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில், கல்லுாரிகளுக்கு இடையே நடந்த மகளிர் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு. பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அரசு மற்றும தனியார் கல்லுாரிகளை சேர்ந்த மகளி ர் கூடைப்பந்து போட்டி, அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இரு நாட்கள் நடந்த போட்டியில் 14 கல்லுாரிகள் கலந்துகொண்டு விளையாடின. பல்வேறு பிரிவுகளாக நடந்த போட்டியில், புதுச்சேரி பல்கலைக் கழக மாணவிகள் முதலிடம் பிடித்து சாம்பியன்ஷிப் கோப்பை பெற்றனர்.
பிம்ஸ் மருத்துவக் கல்லுாரி இரண்டாம் இடம், அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மூன்றாம் இடம், புதுச்சேரி கம்யூனிட்டி கல்லுாரி நான்காம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேஸ்வரா கல்விக் குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா, இயக்குனர் ரத்தினசாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
கல்லுாரி பொதுமேலாளர் சவுந்தரராஜன், சிறப்பு அதிகாரி ரமேஷ், புதுச்சேரி பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குனர் இளையராஜா, புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி முதல்வர் தாமஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ராஜவேலு மற்றும் துணை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

