/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் மகளிர் தின விழா
/
ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் மகளிர் தின விழா
ADDED : மார் 10, 2024 04:45 AM

புதுச்சேரி கெங்கராம்பாளையம் ஐ.எப்.இ.டி. பொறியியல் கல்லுாரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
முனைவர் வினோத்குமார் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, 'இன்றைய உலகில் பெண்கள் தங்களது நேரத்தை நமக்காகவும் பயன்படுத்தி, தன் குடும்பம் மற்றும் சமுதாயத்தையும் ஆரோக்கியமான முறையில் வழி நடத்த வேண்டும்' என்றார்.
கல்லுாரி தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கல்லுாரி முதல்வர் மகேந்திரன், துணை முதல்வர் மெடில்டா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கல்லுாரியின் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை முனைவர் ஜெபாஸ்டின் சோனியா ஜாஸ் மற்றும் ஐ.எஸ்.டி., பணியாளர்கள் பிரிவு செய்திருந்தனர்.

