ADDED : மார் 11, 2024 05:22 AM

புதுச்சேரி : அருண்சர்மா சாரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த விளையாட்டுப் போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு வீரராகு, பிரபாதேவி வீரராகு ஆகியோர் பரிசு வழங்கினர்.
புதுச்சேரி அருண்சர்மா சாரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு உழவர்கரை தொகுதி ஜவகர் நகர் சமுதாய நலக்கூடத்தில் மகளிர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடந்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில், அருண் சர்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் வீரராகு மற்றும் பிரபாதேவி வீரராகு ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பிரஷர் குக்கர், ஹாட் பாக்ஸ், சில்வர் பாத்திரம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கினர். இதில், கோமதி, தையல்நாயகி, இளமதி, மகாலட்சுமி, ஷகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
