/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமி ராஜினாமா? புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
/
முதல்வர் ரங்கசாமி ராஜினாமா? புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
முதல்வர் ரங்கசாமி ராஜினாமா? புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
முதல்வர் ரங்கசாமி ராஜினாமா? புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
UPDATED : ஜூலை 09, 2025 12:18 AM
ADDED : ஜூலை 09, 2025 12:13 AM

புதுச்சேரி: சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தி அடைந்த முதல்வர் ரங்கசாமி, பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியதால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
புதுச்சேரியில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி இடையே நிர்வாக ரீதியாக கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், காலியாக உள்ள சுகாதாரத் துறை இயக்குநர் பதவிக்கு துணை இயக்குநர் அனந்தலட்சுமி பெயரை முதல்வர் ரங்கசாமி பரிந்துரைத்துள்ளார். ஆனால், நேற்று மதியம், இயக்குநர் பதவிக்கு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் செவ்வேள் பெயர் வெளியானது.
அதனால் அதிருப்தியடைந்த முதல்வர் ரங்கசாமி, சட்டசபையில் இருந்த சபாநாயகர் செல்வத்தை அழைத்து, 'இனி ஒத்து வராது. நான் ராஜினாமா செய்ய போகிறேன்' என கூறி, மாலையில் நடைபெற்ற கவர்னர் விழாவை புறக்கணித்து, வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
அதிர்ச்சியடைந்த செல்வம், அமைச்சர் நமச்சிவாயத்திடம் தெரிவித்து விட்டு, முதல்வர் வீட்டிற்கு சென்றார். அமைச்சர் நமச்சிவாயம், கவர்னரை சந்தித்து பேசிவிட்டு, பின், முதல்வர் வீட்டிற்கு சென்றார்.
அங்கு ஏற்கனவே காத்திருந்த செல்வத்துடன் சேர்ந்து, முதல்வரை சமாதானப்படுத்தினர். ரங்கசாமி சமாதானமடையாததால், இருவரும் விரக்தியுடன் புறப்பட்டுச் சென்றனர்.