தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாணவர்களுக்கான வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

மாணவர்களுக்கான வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

மாணவர்களுக்கான வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்


UPDATED : நவ 03, 2026 04:25 AM

ADDED : நவ 02, 2026 09:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 04:25 AM ADDED : நவ 02, 2026 09:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான வனம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வனத்துறை அலுவலகத்தில் இன்று (நவ.,2) நடந்தது.

முகாமில், முதன்மை வனவிலங்கு காப்பாளர் அருள்ராஜன், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் காடுகளின் பங்களிப்பு மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, விலங்கு நல மருத்துவர் குமரன், வனத்துறை வேளாண் அதிகாரி அனுப் குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் வன உயிரினங்கள் குறித்துப் பல்வேறு விளக்கங்களை அளித்தனர்.

முகாமில், இரு நல்ல பாம்புகள் மற்றும் ஒரு மலைப்பாம்பு ஆகியவை மாணவர்களின் நேரடிப் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன. குடியிருப்புப் பகுதிகளில் பாம்புகள் தென்பட்டால் அவற்றைப் பாதுகாப்பாகக் கையாளுவது, தற்காப்பு முறைகள், பாம்புகளைப் பிடிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வனத்துறை ஊழியர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர்.

இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பற்றிய அறிவியல் புரிதலை மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், நடந்த முகாமில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us