ADDED : ஏப் 19, 2026 10:43 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்ததவர் ராஜவேல், 46. இவர் தனது மகள், மகன் படிப்பிற்காக புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு செய்வதற்கு, கடந்த 8ம் தேதி தனது மனைவியுடன் புதுக்குப்பத்திற்கு சென்றார்.
பின், 9ம் தேதி ஓட்டுப் பதிவு செய்து விட்டு, அவரது மனைவி கலைச்செல்வி, 38; வம்பாகீரப்பாளைத்திற்கு செல்வதாக கூறி புறப்பட்டார். ஆனால், வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ராஜவேல் புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, கலைச்செல்வியை தேடி வருகின்றனர்.
