sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'கலப்பு'

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'கலப்பு'

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'கலப்பு'


ADDED : மார் 20, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2024 05:09 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், முதல் தற்செயல் கலப்பு நேற்று நடந்தது.

தேர்தலில் பயன்படுத்தும் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் இயந்திரங்களை தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகள் முன்னிலையில் சுழற்சி முறையில் இரண்டு முறை தற்செயல் கலப்பு நடத்தப்படும்.முதல் தற்செயல் கலப்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார்.

உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா, துணை தேர்தல் அதிகாரி வினயராஜ், நோடல் அதிகாரி சிவசங்கரன் பங்கேற்றனர்.

என்.ஆர். காங்., சார்பில் கோபி, பா.ஜ., சார்பில் வெற்றிச்செல்வம், காங்., சார்பில் நீல கங்காதரன், சுவாமிநாதன், பிரதீஷ் இருதயராஜ், தி.மு.க., சார்பில் நடராஜன், தாமோதரன் அ.தி.மு.க., சார்பில் கமல்தாஸ், மோகன்தாஸ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புருேஷாத்தமன், ஆம்ஆத்மி கட்சியின் சார்பில் சுந்தரராஜன் கலந்து கொண்டனர்.

கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் சாப்ட்வேர் பயன்படுத்தி, ஒவ்வொரு தொகுதியிலும் பயன்படுத்தும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்தற்செயல் கலப்பு (ரேன்டமிேஷசன்) நடந்தது.

புதுச்சேரி மாவட்டத்திற்கு உட்பட்ட 23 சட்டசபை தொகுதிகள் மற்றும் மாகி, ஏனாம் பிராந்தியத்திற்கு தலா ஒரு தொகுதியில் பயன்படுத்தப்டுதிற்காக 965 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 1090 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் (வி.வி.பாட்) தற்செயல் கலப்பு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us