/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.ஏ.ஓ., கிராம உதவியாளர், எம்.டி.எஸ்., பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

ADDED : நவ 05, 2025 01:34 AM
புதுச்சேரி: வருவாய்த்துறையில் வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் மற்றும் எம்.டி.எஸ்., (சட்ட அளவியல்) பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வுகளில் தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு அமைப்பின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் 41 வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த செப்., 21ம் தேதி நடந்தது. இத்தேர்வின் முடிவு செப்., 25ம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோன்று 54 கிராம உதவியாளர் மற்றும் 9 எம்.டி.எஸ்., பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 12ம் தேதி நடந்தது.
இதில் வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியார் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கான கணினி திறன் தேர்வு கடந்த 2ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் மற்றும் எம்.டி.எஸ்., பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளியிடப்பட்டது. முதல் மூன்று இடங்களை பிடித்தோரின் விபரம் மற்றும் மதிப்பெண் வருமாறு:
வி.ஏ.ஓ.,: கிருபாகரன்,120.50; அஸ்வின்,119.50; சிவ சாய் வெங்கட யஸ்வந்த் தேஜா,119.25.
கிராம உதவியாளர்: சவுந்தரியன்,82.75; சாந்தகுமார்,73.75; தீபிகா சின்டகுலா,72.50:
எம்.டி.எஸ்.,: விஷ்ணுபிரியா,68.75; நிரஜா,65.75; ஜான்சிலட்சுமி,65.25.