ADDED : ஆக 16, 2025 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 7 ம் ஆண்டு நினைவு தினம் தலைமை அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.
மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி, அவரது உருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார்.மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமிநாராயணன், மாநில துணைத் தலைவர்கள் ரத்தினவேலு, அகிலன், ஜெயலட்சுமி, மாநில செயலாளர்கள் ராமு, ஹேமமாலினி, கோகிலா, மாநில பொருளாளர் ராஜகணபதி, அலுவலக செயலாளர் கவுரிசங்கர்,ஊடகத்துறை அமைப்பாளர் நாகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மறைந்த நாகாலந்து கவர்னர் இல கணேசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

