sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : மார் 19, 2024 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 05:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் பகுதியில் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த சூரமங்கலம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர்கள் மற்றும் , சிறுவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று சந்தேகம்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு பகுதியைச் சேர்ந்த வினோத் 21, அரவிந்த் 19, என்பது தெரியவந்தது.

மேலும், அவர்கள் 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரூ.1400 மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்தனர்.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us