ADDED : அக் 23, 2025 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: ஒடிசா மாநிலத்தில் இருந்து கிருமாம்பாக்கம் அருகே காட்டுக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் வந்தது.
இரவு நேரம் என்பதால், காட்டுக்குப்பம் மெயின் ரோட்டில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இரவு கன மழை பெய்ததால், லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. நேற்று காலை டிரைவர் லாரியை அங்கிருந்து தொழிற்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்றார். ஆனால், லாரியின் சக்கரங்கள் சேற்றில் புதைந்த நிலையில் வெளியே வர முடியவில்லை. பின், இரண்டு கிரேன்கள் வரவழைக்கப்பட்டு அதன் மூலம், லாரி மீட்கப்பட்டது.

