/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முப்படை ராணுவ வீரர்கள் நலசங்கம் துவக்க விழா
/
முப்படை ராணுவ வீரர்கள் நலசங்கம் துவக்க விழா
ADDED : பிப் 26, 2024 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காலாப்பட்டு பகுதியில் உள்ள முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்களுக்கு, 2024ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் செந்தாமரைக்கண்ணன், சின்னையா முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், 15 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சங்க நிர்வாகிகள் செல்வமணி, நீலவண்ணன், ராமமூர்த்தி, தெய்வநாயகம், ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மூத்த உறுப்பினர் சின்னையா, ஆரோக்கியதாஸ் செய்திருந்தார்.

