sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்மாற்றி இயக்கிவைப்பு

மின்மாற்றி இயக்கிவைப்பு

மின்மாற்றி இயக்கிவைப்பு


ADDED : ஜூலை 21, 2025 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2025 04:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை : கே.குச்சிப்பாளையத்தில் புதிதாக ரூ.19.93 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை அங்காளன் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்.

கே.குச்சிப்பாளையம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ., அங்காளன் மின்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் 200 கிலோ வாட்., திறன் கொண்ட புதிய மின் மாற்றி அமைக்கவும், எல்.டி., மின் பாதைகளை வலுவூட்டவும், மின்துறைக்கு பரிந்துரை செய்தார்.

இதன் அடிப்படையில் ரூ.19.93 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதி பெறப்பட்டது. புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் துவக்க விழா நேற்று நடந்தது.விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமையேற்று, புதிய மின்மாற்றியை இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.

திருபுவனை துணை மின் நிலைய உதவி பொறியாளர் பன்னீர்செல்வம், வாதானுார் இளநிலை பொறியாளர் ராஜேந்திரன், மின்பாதை ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஊழியர்கள், கிராம மக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us