ஜிப்மரில் இலிசரோவ் சிகிச்சை குறித்த பயிற்சி பட்டறை
ஜிப்மரில் இலிசரோவ் சிகிச்சை குறித்த பயிற்சி பட்டறை
ADDED : ஏப் 04, 2026 08:24 PM

புதுச்சேரி: ஜிப்மரில் இரண்டு நாள் அடிப்படை இலிசரோவ் சிகிச்சை குறித்த பயிற்சி பட்டறை' நடந்தது.
இலிசசோவ் முறை என்பது எலும்புகளை மீண்டும் உருவாக்க நீளத்தை அதிகரிக்க மற்றும் வளைவு' வடிவ மாற்றங்களைச் சரி செய்யப் பயன்படும் ஒரு சிறப்பு எலும்பியல் சிகிச்சை முறை ஆகும். இதில், வளைய வடிவ வெளிப்புற கருவிகள் (சிங். கம்பி, ராட் போன்றவை) உடலின் வெளியே பொருத்தப்பட்டு, மெதுவாக கட்டுப்படுத்தப்பட்ட இழுப்புச் சக்தி வழங்கப்படுகிறது.
இதன் மூலம் புதிய எலும்பு வளர்ச்சி துாண்டப்படுகிறது. இந்த முறையை ஏஷ்ய மருத்துவர் கவ்ரியல் இலிசரோவ் உருவாக்கினார். சிக்கலான எலும்பு முறிவுகள், ஆறாத எலும்புகள், அங்க நீள வேறுபாடு மற்றும் வடிவ மாற்றங்கள் போன்ற சிகிச்சைகளில் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த இலிசரோவ் சிகிச்சை குறித்து இரண்டு நாள் பயிற்சி பட்டறை, ஜிப்மரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, ஜிப்மர் எலும்பியல் துறை சார்பில், நடந்த நிகழ்ச்சியில், துறைத் தலைவர் கூரேஷ் காந்தி தலைமை தாங்கினார். டாக்டர் பசுபதி ஒருங்கிணைப்பு செய்தார்.
இப்பயிற்சியில், மும்பையைச் சேர்ந்த டாக்டர் மங்கள் பாரிஹார், கேரவாவைச் சேர்ந்த டாக்டர் வாசுதேவன் ஆகியோர் முதன்மை ஆசிரியர்களாக இருந்து தங்கள் விரிவான அனுபவத்தை பகிர்ந்தனர். இந்நிகழ்வு, தென் இந்தியாவில் மேம்பட்ட எலும்பியல் பயிற்சிக்கான முக்கிய கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை நிகழ்வாக அமைந்தது.
இதில், தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 50 இளம் எலும்பியல் மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள் பங்கேற்றனர். விரிவுரைகள் மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் இணைந்து நடை பெற்ற இந்த நிகழ்வில், பங்கேற்பாளர்கள், நிபுணர்களுடன் நேரடியாக கலந்துரையாடி இலிசரோவ் முறையின் நடை முறை பயன்பாடுகளை அறிந்தனர்.
