/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழையால் சுற்றுலா தலங்கள் வெறிச்
/
மழையால் சுற்றுலா தலங்கள் வெறிச்
ADDED : ஜன 26, 2026 04:30 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் மழையால், சுற்றுலா தலங்கள் மற்றும் சண்டே மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
இலங்கை தென்மேற்கு வங்க கடலில், வளி மண்ட சுழற்சியால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. புதுச்சேரியில் நேற்று காலையில் இருந்து இரவு வரை மழை விட்டு, விட்டு பெய்தது.
அதனால், சண்டே மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அதே போன்று, விடுமுறை நாளான நேற்று கடற்கரை சாலை, நோணாங்குப்பம் படகு குழாம், பூங்காக்கள், கோவில்கள், நேரு வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் நடமாற்றம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
குளிர்ந்த காற்றுடன், தொடர்ந்து மழைபெய்ததால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

