ADDED : மார் 10, 2024 05:23 AM
அ நிறம் | அளவு
திருக்கனுார், : கொடுக்கூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை உற்சவம் இன்று நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான கொடுக்கூர் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மயானக்கொள்ளை உற்சவம் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடந்த 8ம் தேதி காலை 10:00 மணிக்கு பால்குடம் ஊர்வலம், அபிஷேக ஆராதனை நடந்தது.
நேற்று (9ம் தேதி) காலை 8:00 மணிக்கு கொரைக் கூடை வீதியுலா, இரவு 9:00 மணிக்கு குறத்தி வேடத்தில் அம்மன் ஊர்வலம், வல்லாளக்கண்டன் கோட்டையை அழித்தல், ரணகளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்வாக, இன்று (10ம் தேதி) மதியம் 12:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயானத்திற்கு சென்று, மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது.
