ADDED : ஜன 19, 2026 04:58 AM
காரைக்கால்: காரைக்கால் கார்னிவல் திருவிழாவையொட்டி, பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.
காரைக்காலில் கார்னிவல் திருவிழா கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இவ்விழாவை உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.
நேற்று இறுதி நாள் விழாவை நள்ளிரவு வரை பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். இதனால், இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே, இன்று ஒரு நாள் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, நாஜிம் எம்.எல்.ஏ.,கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, இன்று 19ம் தேதி காரைக்காலில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ரவிபிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், 10வது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தேர்வுகள் ஏதேனும் இன்று 19ம் தேதி நடந்தால், வழக்கம்போல் நடைபெறும் என, தெரிவித்துள்ளார்.

