ADDED : ஏப் 20, 2026 06:29 PM

புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் தலைவர் தனசேகரன் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, திருக்குறள் கூறும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
இதில், பங்கேற்று திறக்குறள் கூறிய நியூ லேண்ட் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
சங்கப் பொருளாளர் அருள் செல்வம், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, சுயநிதி பள்ளி கூட்டமைப்பின் தலைவர் ரங்கநாதன், பொறிஞர் பாலசுப்ரமணியன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சிவேந்திரன், ஆனந்தராசன், நியூ லேண்ட் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் காயத்திரி, புவனேஷ், லிபிகா மற்றும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
