/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுக்கூட்டம் நடத்த இடம் இல்லையாம்
/
பொதுக்கூட்டம் நடத்த இடம் இல்லையாம்
ADDED : மார் 19, 2024 05:10 AM
அ.தி.மு.க., செயலர் கவலை
புதுச்சேரி: ஏ.எப்.டி. திடலை தற்காலிக பஸ் நிறுத்தமாக மாற்றும் திட்டத்தை தேர்தல் முடியும் வரை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் துறைக்கு அ.தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.
அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், தலைமை தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில்;
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தும். அதில், தேசிய தலைவர்கள் பங்கேற்பர். புதுச்சேரி நகர பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தும் அண்ணா திடலில் தற்போது கட்டுமான பணி நடக்கிறது. மற்றொரு இடமான ஏ.எப்.டி. திடல் தற்காலிக பஸ் நிறுத்தமாக மாற்ற அரசு அறிவித்துள்ளது. நகர பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த இடமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் முடியும் வரை ஏ.எப்.டி. மைதானத்தை தற்காலிக பஸ் நிலையமாக மாற்றும் முடிவை அரசு ரத்து செய்து, தேர்தலுக்கு பிறகு மைதானத்தில் பஸ் நிலையமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

